கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீக்கிரையான கப்பல் - பாதிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வு
கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு இந்தியா மற்றும் கட்டார் நாடுகளின் இரண்டு துறைமுகங்களிலும் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்ட பின்னரே இலங்கைக்கு வந்ததாக வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பலில் ஏற்பட்ட தீ குறித்த விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் சில கொள்கலன்களை இறக்கிய பின்னரே இலங்கையை நோக்கி வந்ததாக இராஜாங்க அமைச்சர் நாலேகா கடகேவா தெரிவித்துள்ளார்.
திகோவிட முதல் நீர் கொழும்பு வரையிலான கடல் பிராந்தியத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்காகவும், நாட்டின் தென்கடல் பிராந்தியங்களுக்கு எவ்வாறான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நாவா நிறுவனத்தின் சிரேஷ்ட நிருபர் தி.மு.க அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இக்கப்பலிலிருந்த நைட்ரிக் அமிலம் தீயில் எரிந்து வளிமண்டலத்திலும், சிறிய அளவு நீரிலும் கலந்திருக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பெரிய மீன்களுக்கு எவ்வித பிரச்சினை இல்லை என்பதோடு, சிறிய மீன்கள் வேகமாக நீந்திச் செல்ல முடியாததால் உயிரிழக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam