பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது
வவுனியாவில் நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸாரினால் நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தமது உடைமையில் கஞ்சா பொதிகளுடன் நடமாடிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்கள் 20, 21, 21, 22, 31 வயதினை உடைய மகாரம்பைக்குளம், பூந்தோட்டம், மதகுவைத்தகுளம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களெனவும் இவர்களின் உடைமையிலிருந்து 8740 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களிடமும் கஞ்சா எப்படி, எங்கிருந்து வந்ததென விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரணையின் பின்னர் ஐவரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
