வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு நிவாரணமாக அரச ஊழியர்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு
ஆடைத்துறை, பெருந்தோட்டம் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வழங்கப்படாவிட்டால் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் பிற தனியார் துறை தொழில்துறையினர் மற்றும் சேவை ஊழியர்களுக்கு ஜனவரி 21ஆம் திகதிக்கு முன்னர் 5,000 ரூபாய் நிவாரண உதவித் தொகையை வழங்க ஸ்ரீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை சமாளிக்கும் வகையில், எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் நிவாரணமாக ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படாவிட்டால், அரசுக்கு எதிராக போராட்டங்களையும், தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் தொழிலாளர் சங்கத்தின் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு விஜயம் செய்து நாடு திரும்பிய ஸ்ரீலங்கா நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவாக வழங்குவதாக அறிவித்தார்.
எனினும் முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்தாலோசித்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தொழில் அமைச்சருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொவிட் வைரஸ் பரவி நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், ஏற்றுமதித் துறையில் தனியார் துறை ஊழியர்கள் மேலதிக ஊதியம் இன்றி பணிபுரிந்ததாக உட்பட தனியார் துறை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனினும், ஸ்ரீலங்கா அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர்கள் கோருகின்றனர்.
அரசாங்க ஊழியர்கள் நூறாயிரக்கணக்கான ரூபாய்களை சம்பளமாக பெற்றுக்கொண்டு 5,000 ரூபாய் கொடுப்பனவையும் பெற்றுக்கொள்வதாகவும், எனினும் ஆடை, பெருந்தோட்ட மற்றும் பிற தனியார் துறை ஊழியர்களின் சொற்ப ஊதியத்தையே பெற்றுக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் குடிமக்களை வித்தியாசமாக நடத்துவதாகவும் அன்டன் மார்கஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை 50 சதவிகிதத்தால் குறைக்க வேண்டுமென, அரச தொழில் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் ஆகியன வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையில் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க முடியாது என ஸ்ரீலங்கா தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், கருத்து வெளியிட்டுள்ள பெருந்தோட்ட நிறுவன உரிமைகயாளர்கள், தோட்டப் பகுதிகளின் தற்போதைய நிலைமைய மாற்றமடையும் வரை, 5 சதத்தைக்கூ கூட வழங்குவது கடினம் எதெரிவித்துள்ளனர்.
''தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதால், தேயிலை உற்பத்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
உலக சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்துள்ள போதிலும் பெருந்தோட்ட நிறுவனங்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதனை தரகர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
மறுபுறம் இரசாயன உரத் தட்டுப்பாட்டால்
தேயிலை கொழுந்து உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வளவு பெரிய
கொடுப்பனவை ஒருபோதும் வழங்க முடியாது” என ஊழியர் சம்மேளனத்தின் பணிப்பாளர்
நாயகம் மங்கள யாப்பா தெரிவித்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள்! வெற்றி பெறுவாரா ரணில்.. 9 மணி நேரம் முன்

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri

விமானத்தில் சாப்பாடு கொண்டு சென்ற பயணிக்கு ரூ.2 லட்சம் அபராதம்! ஷாக்கான நபர்...நடந்தது என்ன ? Manithan
