19 வருடங்களின் பின்னர் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு - ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை
19 வருடங்களுக்கு முன்னர் நபரொருவரை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட உறவினர்கள் உள்ளடங்கிய ஐவருக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (22) மரண தண்டனை விதித்துள்ளது.
தடிகளால் தாக்கி கொலை
கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாத காலப்பகுதியில் படபொல - படதூவ பகுதியை சேர்ந்த ஒருவர் குடும்பத்தகராறு காரணமாக தடிகளால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை பல வருடங்களாக நடத்தப்பட்டு வந்த நிலையில், சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவ்வித சந்தேகங்களுமின்றி நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குற்றவாளிகள் ஐவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
இலங்கைக்கு FBI புலனாய்வுக்குழு வந்துள்ளதாக வெளியான தகவல்! அமெரிக்கத்தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு