போதைப்பொருள் வியாபாரி இருவர் உள்ளிட்ட 5 பேர் கைது
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கேரள கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் என்பவற்றுடன் பொருள் வியாபரிகள் இருவர் உட்பட 5 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 1.85 கிலோகிராம் கஞ்சா மற்றும் 202 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் வாழைச்சேனை செம்மண்ணோடை பகுதியிலுள்ள வீடொன்றை முற்றுகையிட்டு சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது வியாபாரத்துக்காக மன்னார் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா வியாபாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை பொலிஸார் தொடர்ச்சியாக முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் 202.65 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரநடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
