உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மட்டக்களப்பில் அடுத்த ஆண்டில் ஐந்து புதிய திட்டங்கள்

health
By Independent Writer Dec 24, 2020 06:08 PM GMT
Report

உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் ஐந்து புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

மட்டக்களப்பில் உலக உணவுத் திட்டத்தினூடாக இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் நடைறைப்படுத்தப்படவுள்ள 5 திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இவற்றில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பாளர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த அவற்றுக்கான கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

1 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆட்டுக்கொட்டில்கள் 82, 2 இலட்சத்து 40 ஆயிரம் பெறுமதியான சகல வசதிகளும் கொண்ட 7 மாடு வளர்க்கும் கொட்டில்கள், 1 இலட்சத்து 7 ஆயிரம் பெறுமதியான கோழி உட்பட அவற்றுக்கான பண்ணைகள் 91 என்பன வழங்கப்படவுள்ளன.

மேலும் காளான் வளர்ப்பு, தெளிக்கம் நீர் பாசனத்திட்டம், விவசாய உற்பத்திகளுக்கான பெறுமதி சேர் வசதிகள் மற்றும் நன்னீர் மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கள் போன்ற ஐந்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இது தவிர இவ்வாண்டில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசமாகிய வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட 15 விவசாயக் கிணறுகள், புனரமைக்கப்பட்ட 6 விவசாய நீர்ப்பாசன சிறிய குழங்கள் உட்பட ஒரு இலட்சம் மீன் குஞ்சுகள் வீதம் இடப்பட்ட அடைச்ச கல் குளம், இரும்பன்டகுளம், கண்டியனாறு குளம், நல்ல தன்னி ஓடை குளம், பொக்கட்டச்சேனை குளம் என்பன தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளன.

இதன்போது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணிமூர்த்தி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார், கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் கே.ஜெகன்னாத், உலக உணவு நிகழ்ச்சித்திட்ட மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சி இணைப்பாளர் பத்மரஜினி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US