பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: அவசரமாக வழிமொழியக் கூடாது! ஐந்து எம்.பிக்கள் சபாநாயகருக்குக் கூட்டுக் கடிதம்

Parliament of Sri Lanka Sri Lanka Law and Order Sri Lanka Prevention of Terrorism Act
By Rakesh Nov 24, 2026 09:04 AM GMT
Report

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் மாத்திரம் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எடுக்கக் கூடாது என்றும், சிவில் மற்றும் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களின் யோசனைகள் மற்றும் திருத்தங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழரசு கட்சியின் உறுப்பினரொருவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பைஸர் முஸ்தபா, அஜித் பி. பெரேரா மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சபாநாயகரிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளனர்.

சபாநாயகருக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ள கூட்டுக் கடிதத்தில், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து ஆராய்வதற்காக, ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டம் நவம்பர் 23ஆம் திகதியன்று கூடவுள்ளது. இந்தச் சட்டவாக்கத்தைக் குழு ஆராய்வதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

சட்டமூலத்துக்கு குழு அங்கீகாரம்

மாறாக, ஜனாதிபதியால் பகிரங்கமாக வாக்குறுதியளிக்கப்பட்ட கலந்தாலோசனைச் செயன்முறையை அரசு நிறைவு செய்வதற்கு முன்னதாகவே, இந்தச் சட்டமூலத்துக்குக் குழு அங்கீகாரம் வழங்குவதற்கோ, வழிமொழிவதற்கோ அல்லது சாதகமான பரிந்துரையொன்றை வெளியிடுவதற்கோ உள்ள சாத்தியக்கூறுகள் குறித்தே எமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளோம்.

ஆரம்பகட்டப் பரிசீலனைகள் முன்னெடுக்கப்படலாம் எனினும், அர்த்தமுள்ள வகையில் பங்குதாரர்களுடனான கலந்தாலோசனைகள் இடம்பெறும் வரை அங்கீகாரம் வழங்குவதோ அல்லது வழிமொழிவதோ ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பதே எமது பிரதான நிலைப்பாடாகும்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டவாக்கத்தை அரசு நாடாளுமன்றத்தின் ஊடாக அவசர அவசரமாக நிறைவேற்றாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026 நவம்பர் 7ஆம் திகதி பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

மனித உரிமைகள் சார்ந்த கரிசனைகளை எழுப்பிய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பங்குதாரர்களுடன் விரிவான கலந்தாலோசனைகளை நடத்துதல், அவர்களின் ஆட்சேபனைகளைக் கருத்திற்கொள்ளுதல் மற்றும் பரந்தளவிலான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முயற்சித்தல் ஆகியவை அவரது உறுதிமொழிகளில் உள்ளடங்கியிருந்தன.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: அவசரமாக வழிமொழியக் கூடாது! ஐந்து எம்.பிக்கள் சபாநாயகருக்குக் கூட்டுக் கடிதம் | Five Mps Send A Joint Letter To The Speaker

கலந்தாலோசனை

கலந்தாலோசனைகளை நடத்துவதாக வழங்கப்பட்ட பகிரங்க உறுதிமொழிக்கும், அத்தகைய கலந்தாலோசனைகள் நிறைவடைவதற்கு முன்னரே ஓர் உறுதியான முடிவை எட்டக்கூடிய குழுவின் செயன்முறைக்கும் இடையிலான வேறுபாட்டிலிருந்தே நாடாளுமன்றக் கரிசனை எழுகின்றது.

அரசு அறிவித்த கலந்தாலோசனைச் செயன்முறையுடன் அதன் முன்மொழியப்பட்ட சட்டவாக்கக் கால அட்டவணை எவ்வாறு ஒத்துப்போகின்றது என்பதை விளக்குமாறு கோருவதற்கு இதுவொரு முக்கிய அடிப்படையை வழங்குகின்றது.

பல சிவில் சமூக அமைப்புகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள், அரசுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான வாய்ப்புத் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதாகச் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு முறையீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்றத்துக்குத் தெளிவாக அதிகாரம் உண்டு. எனினும், ஜனாதிபதியால் பகிரங்கமாக வழங்கப்பட்ட கலந்தாலோசனை உறுதிமொழியை அரசு நிறைவேற்றுவதற்கு முன்னரும், பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு அர்த்தமுள்ள வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னரும் இந்தச் சட்டமூலத்தைக் குழு வழிமொழிய வேண்டுமா என்பதே தற்போதுள்ள பிரதான பிரச்சினையாகும் என்றுள்ளது.

சொகுசு காரில் வந்த தம்பதியினரின் மோசமான செயல்! நடுவீதியில் சுற்றிவளைத்த பொலிஸார்

சொகுசு காரில் வந்த தம்பதியினரின் மோசமான செயல்! நடுவீதியில் சுற்றிவளைத்த பொலிஸார்

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, முரசுமோட்டை

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US