வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் ஐந்து பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் ஐந்து பேருக்கு இன்றிரவு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாறான முறையில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதில் அங்கு பணியாற்றும் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு நேற்று மாலை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து குறித்த ஆடைத்தொழிற்சாலையில் தொற்றாளர்களுடன் இணைந்து பணியாற்றியவர்களிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு தொகுதி முடிவுகள் இன்றிரவு வெளியாகிய நிலையில் அதில் நான்கு பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தொற்றாளர்கள் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற போதும் அவர்கள் மருதமடு, கல்நாட்டாங்கல், பதவியா, மதவாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam