இலங்கையில் மேலும் ஐவர் கோவிட் - 19 தொற்றுக்கு பலி!
இலங்கையில் மேலும் ஐவர் கோவிட் - 19 தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கோவிட் - 19 தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக 05 கோவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. துனகஹா பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர், குருணாகல் போதானா வைத்தியசாலையில் கடந்த 20ம் திகதி உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. நுகேகொடை பிரதேசத்தில் 82 வயதான பெண் ஒருவர் வீட்டிலேயே கடந்த 19ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட், நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
3. கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர், கடந்த 20ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். கோவிட் நோய்த் தொற்று, இரத்தம் விசமாகியமை மற்றும் சிறுநீர்ப்பாதையில் ஒவ்வாமை ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. மினுவன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான பெண் ஒருவர், முல்லேரியா வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய் மற்றும் கோவிட், நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
5. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர் கடந்த 20ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கோவிட், நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan