மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி
மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30 ஆம் திகதி கொழும்பு பகுதியில் இருந்து மன்னார் வருகை தந்து எருக்கலம்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கே இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக பொலிஸார் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களினால் மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கப் பெற்ற நிலையிலேயே குறித்த ஐவருக்கும் 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த நிலையில் குறித்த குடும்பத்தினரை பாதுகாப்பான முறையில் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மன்னாரைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
