யாழில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உட்பட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐவர் கோவிட் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும், நெல்லியடியைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரும், சுன்னாகத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இரண்டு பெண்கள் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண்கள் வைத்தியசாலை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர், பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் என்றும், மற்றையவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 69 வயதுடைய வயோதிபப் பெண் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இருவரும் காய்ச்சலுடன் மூச்சுச் திணறிய நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 236ஆக உயர்வடைந்துள்ளது.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
