பிரித்தானியா - லங்காஷையரில் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் - ஐவர் படுகாயம்
பிரித்தானியா லங்காஷையரில் - ஸ்கெல்மர்ஸ்டேலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தால் பல அடுக்குமாடி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து அம்பிலன்ஸ் சேவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர சேவைகள் கையாளப்படுவதால் பொதுமக்கள் அந்த பகுதியை தவிர்க்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் பல வீடுகளில் அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan