இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதல்! - ஐவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்
மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் கோழி உரத்தை ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் புத்தளம், முந்தலம் - மங்களஎளிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என முந்தலம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் நவடன்குளத்திலிருந்து நுரைச்சோலை நோக்கி சென்ற லொறியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இரு லொறிகளின் சாரதிகளும் மற்றும் லொறியில் பயணித்தவர்களுமே படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் பிரதேச மக்களின் உதவியுடன் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இரு லொறிகளும் பாரியளவில் சேதமடைந்துள்ளன.
விபத்து தொடர்பில் முந்தலாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.








நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
