புதையல் தோண்டும் ஸ்கேனருடன் ஐவர் கைது
முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(06.09.2026) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நெலுக்குளம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் புதையல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் ஒன்றும் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனம் ஒன்றும் பொலிஸாரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர்களை இன்று(07.09.2026) முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.