நெடுந்தீவு கொலைக்கும் கடற்படைக்கும் தொடர்பு இருக்கலாம்: செல்வராஜா கஜேந்திரன் குற்றச்சாட்டு (video)
‘‘நெடுந்தீவில் இடம்பெற்ற கொலைக்கும் கடற்படைக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் கொள்வதாக‘‘ யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமது அலுவலகத்தில் இன்று (23.04.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது,
நெடுந்தீவில் இருந்து மக்களை வெளியேற்ற திட்டம்
‘‘நெடுந்தீவு என்பது பாரிய கடற்படை முகாம் ஒன்றுக்குள் மக்கள் இருப்பது போன்ற ஒரு சூழல் காணப்படுவதாகவும், அவ்வாறான நிலையில் எவ்வாறு அங்கு கடற்படைக்கு தெரியாமல் இவ்வாறான கொலை எவ்வாறு நடந்து இருக்கும் என்று தாம் சந்தேகப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த கொலை மூலம் இருக்கின்ற மக்களை நெடுந்தீவிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த கொலைகள் அரங்கேற்றப்படுகிறதா என்ற சந்தேகமும் தனக்கு எழுவதாகவும் தெரிவித்துள்ளார்‘‘
You may like this Video