தொடரும் அலட்சியம்! - மேலும் ஐவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவலம்
அளுத்கம, மொரகல்ல கடலில் நீராடச் சென்ற ஐந்து பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் இருந்து நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது 16 வயதுடைய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போனவர் களுவாமோதர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, நீர் நிலைகளில் இருந்து அண்மைய நாட்களாக அதிகளவானோர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவகள் பதிவாகியுள்ளன.
பதுளை – கரந்திஎல்ல பகுதியிலுள்ள ஆற்றில் நிராடிக் கொண்டிருந்த தருணத்தில், நீரில் அடித்துச் சென்று காணாமல் போன ஐவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவத்தை அடுத்து நீர் நிலைகள், ஆறு மற்றும் கடலில் நீராடச் செல்வது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.