கோறளைப்பற்று மத்தியில் மூன்று நாட்களில் கோவிட் தொற்றில் ஐவர் மரணம்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த மூன்று நாட்களில் கோவிட் தொற்றின் காரணமாக ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாகச் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரும், பிறைந்துறைச்சேனை அறபா வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய சிறுநீரக நோயாளி ஒருவருமாக இரண்டு பேர் மரணமடைந்தனர்.
அத்தோடு திங்கட்கிழமை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் மரணமானதுடன், 74 வயதுடைய அவரது மனைவி நேற்று திங்கட்கிழமை இரவு மரணமடைந்ததுடன், வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் மரணமடைந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவிட் வைரசின் மூன்றாவது அலையின் காரணமாக கோறளைப்பற்று மத்தி
பிரதேச செயலக பிரிவில் இதுவரையில் ஐந்து பேர் கோவிட் தொற்றினால்
மரணமடைந்துள்ளதாகச் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri