பாடசாலையில் மடிக்கணினிகளை திருடியவர்கள் கைது
களுத்துறை - பேருவளை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் வகுப்பறையை உடைத்து மடிக்கணினிகளைத் திருடிய அதே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட ஐவர் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது, இன்று (25.03.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், அடுத்த வருடம் க.பொ.த பொதுப் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயதுடைய மாணவர்கள் இருவர் மற்றும் பாணந்துறை, பாதுக்க பிரதேசங்களில் வசிக்கும் மூவர் இணைந்தே நவீன வகுப்பறையை உடைத்து 12 மடிக்கணினிகளை திருடியுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
மேலும், கடந்த பெப்ரவரி மாதம் பாடசாலையின் வகுப்பறைக்குள் மடிக்கணினி உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, குறித்த பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் மடிக்கணினிகளை விற்பனை செய்ய முற்பட்டதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், பாணந்துறை - பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை தொடர்பு கொண்டு மடிக்கணினிகளை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்தே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட 12 மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam