இலங்கையின் பொருளாதார குறிகாட்டிகளை மேம்படுத்தியுள்ள ஃபிட்ச் மதிப்பீடுகள்
சர்வதேச இறையாண்மை பத்திர மறுசீரமைப்பு நிறைவடைந்து, பேரண்ட பொருளாதார குறிகாட்டிகளுக்கான மேம்பட்ட கண்ணோட்டத்தைக் காரணம் காட்டி, ஃபிட்ச் மதிப்பீடுகள் இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை, கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து 'CCC+' தரத்துக்கு மேம்படுத்தியுள்ளது.
'CCC+' அல்லது அதற்குக் குறைவான மதிப்பீட்டைக் கொண்ட இறையாண்மைகளுக்கு, ஃபிட்ச் தரமதிப்பீட்டு (Fitch Ratings) நிறுவனம், பொதுவாக ஒரு கண்ணோட்டத்தை ஒதுக்குவதில்லை.
எனினும், சர்வதேச இறையாண்மை பத்திர மறுசீரமைப்பு நிறைவடைந்து, உள்ளூர் நாணயக் கடனில் மற்றொரு கட்டுப்பாட்டு நிலை ஏற்படும் ஆபத்து குறைக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் நாணயத்தையும் 'CCC-' இலிருந்து 'CCC+' ஆகவும் ஃபிட்ச் மேம்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |