சர்வதேச ரீதியாக மிகவும் மோசமான நிலையை பதிவு செய்த இலங்கை
சர்வதேச ரீதியாக வங்குரோந்து அடைந்த நிலையில் மிகவும் நிலையை இலங்கை பதிவு செய்துள்ளது.
Fitch Ratings தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் உள்நாட்டு நாணயங்களில் பெறப்பட்டுள்ள நீண்ட கால கடன்களுக்கான தரப்படுத்தலை மேலும் தரமிறக்கியுள்ளது.
அதற்கமைய, குறித்த தரப்படுத்தல் C மட்டத்திலிருந்து CC ஆக தரமிறக்கப்பட்டுள்ளதாக Fitch Ratings தரப்படுத்தல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கை நீண்ட கால வௌிநாட்டு கடனை எல்லையற்ற வகையில் செலுத்தத் தவறும் நாடாக ஏற்கனவே தரமிறக்கியுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் ஊடாக, கடன் பரிமாற்றத்தை மேற்கொள்வது பொருத்தமானது என்றாலும் அதன்மூலம் வழமையான கடன் செலுத்துதல்களை தவறவிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் Fitch Ratings நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.