இரண்டு வருடங்களில் இலங்கையை ஐந்து முறை தரமிறக்கிய ஃபிட்ச் ரேட்டிங்ஸ்
2015 மே முதல் 2022 மே வரையான ஏழு ஆண்டுகள் காலப்பகுதியில் இலங்கையின் கடன் மதிப்பீடு ஏழு தடவைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. PublicFinance.lk இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2020 ஏப்ரல் முதல் ஐந்து முறை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கைக்கு இணையான கடன் மதிப்பீட்டைக் கொண்ட பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் இந்தக் காலப்பகுதியில் தமது தரப்படுத்தல்களை நல்ல மட்டத்தில் பேண முடிந்தது.
2022 ஏப்ரல் 18, செலுத்த வேண்டிய சர்வதேச இறையாண்மை பத்திரக் கடன் கொடுப்பனவுகளுக்கான ஒரு மாத கால அவகாசம் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே, ஃபிட்ச் ரேட்டிங்ஸ், மே 19 அன்று இலங்கையின் கடன் மதிப்பீட்டை RD ஆகக் குறைத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan