யாழில் அனுமதியற்ற கடற்தொழில் வலைகளை பயன்படுத்திய 07 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் அனுமதியற்ற கடற்தொழில் வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் சிலர் சுண்டிக்குளம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணி கடற்படைக்குட்பட்ட சுண்டிக்குளம் கடற்பகுதியில் அனுமதியற்ற கடற்தொழில் வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 21-38 வயதிற்கு உட்பட்ட 07 பேரையும் 2 டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
வெற்றிலைக்கேணி கடற்படைக்குட்பட்ட சுண்டிக்குளம் கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கட்டைக்காடு முள்ளியானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீரியல் வளத்திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |