சட்டவிரோத கடற்தொழில் முறைகள் சரியாக நிறுத்தப்படாவிட்டால் மீண்டும் வடக்கில் போராடுவோம்: அன்னராசா (Video)
வடக்கில் சட்டவிரோத கடற்தொழில் முறைகள் நிறுத்தப்படாவிட்டால் வட மாகாணத்தை முடக்கி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் நேற்று (10.10.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ''முல்லைத்தீவில் இடம்பெற்ற கடற்தொழிலாளர்களின் போராட்டமானது ஒரு நியாயமான போராட்டம். அந்தப் போராட்டத்திற்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்.
கடற்தொழிலாளர்களுக்கு சார்பாக தீர்வு வழங்கப்படல்
இந்நிலையில் போராட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து வந்த குழுவொன்று அவர்களது கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து அமைச்சு மட்டத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி தீர்வு வழங்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
கடற்தொழிலாளர்களுக்கு சார்பாக தீர்வு வழங்காவிட்டால் வடக்கு மாகாணத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு நாங்க தீர்மானித்துள்ளோம்.
எனவே எமது எதிர்பார்ப்பை கடற்தொழில் அமைச்சர் மீறுவாராக இருந்தால் வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழில்களை நிறுத்துவதற்குரியவாறாக அவருடைய தீர்மானம் அறிவிக்கப்பட வேண்டும் இவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் வடக்கு மாகாணம் முழுவதிலும் கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளோம்.
கடற்படையினர் மற்றும் அரச அதிகாரிகள்
சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பாக இருக்கின்ற கடற்படையினர் மற்றும் அரச அதிகாரிகள் இன்னும் கட்டுப்படுத்தாத சட்டம் பலமாக உள்ளது.
ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படாமையால் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு முல்லைதீவு கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தினை மேற்கொண்டனர்.
அவர்களது நியாயமற்ற கோரிக்கைக்கு செவி சாய்ப்பதாகவே அரசாங்கம் இருக்கின்றது. முல்லைதீவில் சட்டவிரோத தொழில் செய்பவர்கள் நியாயமான தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக போராடியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
சட்டவிரோத கடற்தொழிலாளர்கள்
இனிவரும் காலங்களில் சட்டவிரோத தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கு மாகாண கடற்படை தளபதிக்கு கடற்தொழிலாளர் சமூகங்கள் சார்பில் ஒரு கோரிக்கை முன்வைக்கின்றோம்.
இந்த சட்டவிரோத தொழில்களை நிறுத்த வேண்டிய பொறுப்பு கடற்படையினருக்கு உள்ளது. எனவே சட்டத்தினை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றோம்'' என தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
