எச்சரிக்கையை மீறி கடற்றொழிலுக்கு சென்று விபத்துக்குள்ளாகிய படகு
யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இன்று(17) அதிகாலை மீன்பிடி படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வானிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் 19ம் திகதிவரை கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென எச்சரிக்கப்பட்டிருந்த நிலையிலும் எச்சரிக்கையை மீறி கடற்றொழிலுக்கு சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
படகு விபத்து
படகில் பயணித்த இருவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். எனினும் அவர்களின் ஒரு தொகுதி மீன்பிடி வலைகள் கடலுக்குள் மூழ்கின.

சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குறித்த இரு கடற்றொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்டு விபத்துக்குள்ளான படகையும் கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இளம் வயதில் இரண்டு காதலிகள்... எப்ஸ்டீன் தொடர்பால் பதவி இழந்த பெரும் நிறுவனத்தின் தலைவர் News Lankasri
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri