தமிழக கடற்றொழிலாளர்களின் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிறது! அன்னராசா சுட்டிக்காட்டு
தமிழக கடற்றொழிலாளர்களின் மீன்பிடி தடைக்காலம் நேற்று(14.5.2026) நள்ளிரவுடன் நிறைவடைகிறது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று நள்ளிரவிற்கு பின்பு கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது சீ ஒவ் சிறிலங்கா கடற்பரப்பிற்குள் வரவேண்டாம்.
எமது கடல்வளத்தினை தடைசெய்யப்பட்ட இழுவை மடி வலைகள் மூலம் அழிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
கோரிக்கை
புதிய தமிழக முதல்வர் பதவியேற்றதன் பின்னர் நடைமுறைக்கு வருகின்ற முதலாவது மீன்பிடி தடைக்கால தளர்வு என்பதால் இனி வருங்காலத்தினை பொறுத்திருந்து தான் அவதானிக்கவேண்டும் என்பதுடன் முதல்வரும் இதில் கவனம் செலுத்தவேண்டும் என கோருகிறோம்.
கடற்சூழல் தனியே இலங்கைக்கானது மட்டுமல்ல கடல்வளம் அழிக்கப்பட்டால் கடற்சூழல் அழிக்கப்படுவதால் சமநிலை பாதிக்கப்படும்.
வடபகுதி கடற்றொழிலாளர்கள் அரசின் வானிலை அறிவிப்புக்களை கருத்திற்கொண்டு கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.இதன் மூலம் உயிரிழப்புக்களை தடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.