சர்வதேச கடல் எல்லைகளை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கையின் 18 ஆழ்கடல் மீன்பிடி படகுகள்
சர்வதேச கடல் எல்லைகளில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைளில் ஈடுபடுவதாக கூறப்படும் 18 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றில் மீன்பிடிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மீன்பிடி திணைக்களத்தின் மிரிஸ்ஸ மீன்பிடி பரிசோதகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் எல்லையை மீறி அனுமதிப்பத்திரம் இன்றி ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து இலங்கை கடற்படையின் விசேட குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
18 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவை அனைத்து வெலிகமை , மிரிஸ்ஸ பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது என மீன்பிடி திணைக்களம் கூறியுள்ளது.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
