முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்!முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளரை இடம்மாற்ற வேண்டாம் எனக் கோரி மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
அத்தோடு, கரைதுறைப்பற்றுபிரதேச சபை தவிசாளரை மாற்றக்கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று (19)காலை முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் இருந்து ஆரம்பமாகி கையில் பதாதைகளை தாங்கியவாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.
கடற்றொழிலாளர்களின் கோரிக்கை
மாற்றாதே, மாற்றாதே நீரியல்வளத்திணைக்கள அதிகாரியினை மாற்றாதே,நீதியாக செயற்படும் அதிகாரிக்கு இடம்மாற்றமா?கடற்றொழில் மக்களின் கருத்துக்களை செவிமடுக்காத தவிசாளர் உடனடியாக பதவி விலக வேண்டும், வளங்களை பாதுகாக்கும் நீரியல்வள அதிகாரியை இடம்மாற்றாதே போன்ற வசனங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவினை மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களிடம் கையளித்துள்ளார்கள்.
இதன்போது, கடற்றொழிலாளர்களின் கோரிக்கையினை அமைச்சின் செயலாளரிடம் அனுப்பிவைப்பதாக தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம்,சம்மேளனம்,தேசியமீனவ மாவட்ட இணையம்,கரைவலை சம்மாட்டி சங்கம் ஆகியன காணப்பட்டபோதும் உண்மைத்தன்மையினை ஆராயாமலும்,கரையோரா பிரதேச சபை உறுப்பினர்களிடமோ கலந்தாலோசிக்காமல் கடற்தொழிலில் ஈடுபடாத வெலிஓயாவில் உள்ள ஒருசிலரும் மற்றும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் ஒருசிலரும் கடந்த (26)அன்று கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரியினை மாற்றகோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச தமிழரசு கட்சியின் தவிசாளர் நீரியல்வளத்திணைக்கள மாவட்ட உதவிப்பணிப்பாளர் தொடர்பில் உண்மைக்கு புறம்பான கருத்தினை வெளியிட்டுள்ளார்.
உதவிப்பணிப்பாளருக்கு மாற்றம்
நீரியல் வளத்திணைக்களம் ஒரு மதுபானசாலை போன்று உள்ளது என்றும் உதவிப்பணிப்பாளரை மாற்ற வேண்டும் என்றும் ஊடக அறிக்கை ஒன்றினை வழங்கியுள்ளார். இதன் பிரகாரம் தற்போது உதவிப்பணிப்பாளருக்கு மாற்றம் வந்துள்ளது.
ஆனால் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் மோகன்குமார் துணிச்சலாக சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.இவ்வாறு இவரது இடம்மாற்றம் நடைபெற்றால் முல்லைத்தீவு கடல்வளம் அழிவடைய காரணமாக அமையும் என கடற்றொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
இந்த இடமாற்றத்தினை நிறுத்துவதற்கு சிபார் செய்யுமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளரை மாற்றசொல்லி கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ள நிலையில் அதனை பார்த்த கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினர் கொழும்பில் உள்ளவர்கள் அதிகாரியினை மாற்றும் நடவடிக்கையினை ஈடுபட்டுள்ளார்கள் கரைத்துறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் கடற்தொழில் அமைப்புக்களையோ அல்லது கடற்தொழில் சம்மந்தமான எந்த ஒரு நபரையுமோ 35 கடற்தொழில் சங்கங்கள் உள்ளன 4அமைப்புக்கள் உள்ளன எவற்றையோ கேட்டு கலந்து ஆலோசிக்காமல் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இதனை தவிசாளரிடம் எடுத்து சொன்னபோது அதற்கு பகிரங்கமாக எங்களிடம் மன்னிப்பும் கேட்டார். அதற்கு எங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டாம் பொது வெளியில் ஊடகங்களுக்கு தெரிவியுங்கள் என்று சொன்னோம். அதற்கு அவர் காலத்தினை இழுத்தடித்துள்ளார்.
சட்டவிரோத தொழில்
இதனை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் கடந்த 02.08.2025 அன்று முல்லைத்தீவு ஊடுக அமையத்தில் ஊடக சந்திப்பு செய்து நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினோம். ஆனால் ஊடகங்களில் அவை வரவில்லை. இது வெளிவராமைக்கு தாவிசாளர் தான்தான் காரணம் என்றும் ஊடக மையத்தினை தான் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றேன் என்றும் எங்களிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு தவிசாளர் எங்களுக்கு தேவையில்லை.கடற்றொழில் மக்களுக்காக குரல் கொடுத்தததை இடைநிறுத்திய தவிசாளர் கரைதுறைப்பற்றுக்கு தேவையில்லை அவரை உடனடியாக மாற்றம் செய்யவேண்டும்.ஆனால் 2024 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு உதவிப்பணிப்பாளராக வந்த மோகன் குமாரின் அனுபவத்தினை வைத்து முல்லைத்தீவு மாவட்ட கடல்வளத்தினை காப்பாற்றி வருகின்றார்.
2025 ஆம் ஆண்டு இதுவரையில் கடற்தொழிலுடன் சம்மந்தப்பட்ட 103 வழக்குகள் தாக்கல் செய்துள்ளார்.சட்டவிரோத தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தி வருகின்றார். 98 இலட்சம் ரூபா பணம் இவ்வாறு வழக்குகளால் பிரதேச சபைக்கு வருமானத்தினை ஈட்டிக்கொடுத்துள்ளார்.
பல சட்டவிரோத தொழில் சொத்துக்களை அரச உடமையாக்கி இருக்கின்றார். இவ்வாறான நபரை மாற்றுவதை நிறுத்தவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம் என முல்லைத்தீவு மாவட்ட தேசிய ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் தலைவனான செயற்பட்டு வருபவர் அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழில் தங்கள் பிரச்சினைகளை கடற்தொழில் அமைச்சரிடம் தொரியப்படுத்துவதற்காக அவரை நேரில் சந்திக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அவர் மாவட்ட மீனவ அமைப்புக்களை சந்திக்க மறுத்து வருவதாக கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக மேலும் இருவர் மனு தாக்கல்!
இடமாற்றம்
அண்மையில் கூட யாழ்ப்பாணத்திற்கு வருமாறு அழைத்த கடற்தொழில் அமைச்சர் அவர் யாழ்மாவட்டத்தில் நின்றபோது அவர் எங்களை சந்திக்காமல் செயலாளரை விட்டு சந்தித்துள்ளார்.
கொக்கிளாயில் இருந்து சாலை வரையான உள்ள கடற்றொழில் மக்கள் தற்போது உள்ள கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள பணிப்பாளர் மோகன்குமாரின் இடம்மாற்றத்தினை இரத்து செய்யவேண்டும் என்பதுடன் புதிதாக வரும் உதவிப்பணிப்பாளர் சுதாகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வேண்டாம் என்று கடற்றொழில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து மாற்றம் செய்தோம்.
மீண்டும் அவரை முல்லைத்தீவிற்கு நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த அரசாங்கம் நல்ல அரசாங்கம் என்று சொன்னாலும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள இராஜாங்க அமைச்சர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மாவட்டத்தில் ஒரு கூட்டத்தினை வைத்து முடித்தார்.அதில் எடுக்கப்பட்ட எந்த தீர்மானமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த அரசு சட்டவிரோதமான கடற்தொழிலுக்கு எதிராக செயற்பட்ட அதிகாரியினை இடமாற்றம் செய்து பிழையான அதிகாரி ஒருவரை நியமித்துள்ளமை இவ்வாறு அந்த அதிகாரி மீண்டும் முல்லைத்தீவிற்கு வருவாராக இருந்தால் அனைத்து கடற்றொழில் ஆர்ப்பாட்டம் செய்து ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தெரியப்படுத்துவோம் என்று முல்லைத்தீவு மாவட்ட சம்மேளன தலைவர் அருள்நாதன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



