தமிழக முதல்வரை சந்திக்க சென்னையில் முகாமிட்ட மீனவ சங்க கூட்டமைப்பினர்
தமிழக முதல்வரை சந்திக்க இந்திய மீனவ சங்க கூட்டமைப்பினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் இரவு கச்சத்தீவுக்கும் தனூஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்து விட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் கரை திரும்பும் போது கச்சத்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் படகுகளை சுற்றி வளைத்தது மீனவர்களை கைது செய்யும் நோக்கில் அச்சுறுத்திய போது, உயிருக்குப் பயந்தும் படகு பறிமுதல் செய்யப்படும் என்ற அச்சத்தால் தப்பியோடிய படகுகள் மீது ரோந்து கப்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும் விரட்டியடித்தனர்.
அப்போது வஸ்தியான் என்பவர் படகு மீது பயங்கரமாக மோதியது இதில் படகு நடுக்கடலில் படகு மூழ்கியது. படகிலிருந்த சுரேந்திரன், ஜெயபால் ,ஆகாஸ் டேனியல்,ராஜா, ஜெபஸ்தீயான் உள்ளிட்ட ஏழு மீனவர்கள் உயிருக்கு போராடி வந்த நிலையில் சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படகு ஒன்று இருக்கும் சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை இழப்பீடு கரை திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் குறித்தும், வரும் 21ஆம் தேதி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் உடனடியாக மீனவ அமைப்புக்களை சந்திக்க விரும்புவதாக கூறியதை அடுத்து மீனவர் சங்க பொறுப்பாளர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
