கிண்ணியாவில் மீனவ சங்க கட்டிடம் உடைப்பு: ஒருவர் கைது! (Photos)
கிண்ணியா அல் ஹிதாயா மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் கட்டிடத்தில் உள்ள பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஏ.எச்.பைரூஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (22) நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் சங்க நிருவாக தெரிவு இடம் பெற்றது இந்நிலையில், கட்டிடத்தின் ஜன்னல்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதன் பின் உள்ள சூத்திரதாரியை கண்டு பிடிக்க வேண்டும்.
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள மீனவ சங்க கட்டிடமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


