இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்
இலங்கை கடற்படையினரால்
காப்பாற்றப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 கடற்றொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அவர்கள், நேற்று(06.07.2023) காலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் உதவி
இதனையடுத்து அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் சாலை வழியாக ராமேஸ்வரம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே கடந்த ஜூன் 19 ஆம் திகதி அன்று படகு பழுதடைந்த நிலையில், இலங்கைக் கடற்படையினர் தமது, படகை சரி செய்து தம்மை திருப்பி அனுப்ப முயற்சித்த போதிலும், படகில் ஒரு துளை ஏற்பட்டு, அதன் மூலம் படகுக்குள் தண்ணீர் புகுந்ததால், பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்தே அவர்கள் தம்மை இலங்கைக்கு அழைத்துச் சென்றதாக மீளத்திரும்பிய தமிழக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
