திருகோணமலையில் பிரதான வீதியை மறித்து கடற்றொழிலாளர்கள் போராட்டம்
திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதியை மறித்து திருக்கடலூர் பிரதேச கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றையதினம் (5) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில் தங்களது கடற்றொழிலாளர்களையும் படகையும் சேதத்துக்கு உள்ளாக்கி தாக்கியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வீதி மறியல் போராட்டம்
இதன் போது பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனால் ஒரு சில மணி நேரம் அப்பகுதி போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

கடற்றொழிலாளரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா, கடற்றொழிலாளரின் நிலமையை பார் உட்பட பல பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இதில் பல நூற்றுக்கணக்கான கடற்றொழில் குடும்பங்கள் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam