கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடற்தொழிலாளர்கள்
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதே செயலகத்திற்கு உட்பட்ட சுண்டிக்குளம் - பூனைத்தொடுவாயை அண்மித்த பகுதியில் கடற்தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்று (26.01.2026) நண்பகலளவில் இடம்பெற்றுள்ளது.
அனுமதி மறுப்பு
உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள வீஞ்சு முறையிலான கரைவலைத் தொழிலை மேற்கொள்ள கடந்த அரசு காலத்தில் நீரியல்வள திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அனுமதியின் பிரகாரம் உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள வீஞ்சு முறையிலான கரைவலைத் தொழிலை மேற்கொள்ள தற்போது நீரியல்வளத் திணைக்களத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்களும், சம்மாட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்
ஜனாதிபதி குறித்த விடயத்தில் கவனம் செலுத்தி தமக்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும், உடனடியாக நிறுத்தும் பட்சத்தில் பல கோடி ரூபா நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி நிர்க்கதியாக நிற்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் தாம் கரைவலைத் தொழிலை மேற்கொள்ள முடியாதவாறு நூற்றுக்கணக்கான இந்திய கடற்தொழிலாளர்களது றோளர் படகுகள் சுண்டிக்குளம் கடற்கரையோரமாக ஆக்கிரமித்துள்ளன.
அவற்றை கட்டுப்படுத்த முடியாத நீரியல்வளத் திணைக்களத்தினர் தமது வாழ்வாதாரத்தை தடுத்து நிறுத்துகின்றனர் என கவலை தெரிவித்துள்ளனர்.


பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam