கடலுக்கு சென்ற யாழ் மீனவர்கள் கரை திரும்பவில்லை:தேடிச் செல்ல ஏனைய மீனவர்களிடம் எரிபொருள் இல்லை
யாழ்ப்பாணம், பருத்தித்துறை சக்கோட்டை கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி இந்த மீனவர்கள் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளதுடன் நேற்றைய தினம் கரை திரும்பி இருக்க வேண்டும்.
எனினும் இதுவரை கரை திரும்பாததால், உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு இது குறித்து அறிவித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
காணாமல் போன மீனவர்களை தேடிச் செல்ல மீனவர்களின் படகுகளுக்கு எரிபொருள் இல்லை என்பதால், கடற்படையினரின் உதவியுடன் மீனவர்கள் தேடி தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சக்கோட்டை பிரதேசத்தில் வசித்து வரும் காணாமல் போன மீனவர்கள் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார், வடப்பிராந்திய கடற்படையின் கட்டளை தலைமையகத்திற்கு அறிவித்துள்ளனர்.
கடலுக்கு சென்ற மீனவர்கள் படகில் ஏற்பட்ட ஏதேனும் தொழிற்நுட்ப கோளாறு அல்லது எரிபொருள் தீர்ந்து போனதன் காரணமாக கரை திரும்ப முடியாமல் இரு்ககலாம் என சந்தேகிக்கப்பதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.