கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த கடற்தொழிலாளர்கள் கைது
கிளிநொச்சி - பூநகரி கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த 36 கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த கடற்தொழிலாளர்கள் நேற்று முன் தினம் இரவு கைது செய்யப்படிருந்த நிலையில் நேற்று (31.03.2026) பிற்பகல் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
பிணையில் விடுவிப்பு
இவர்கள் மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதுடன் இதன்போது சந்தேகநபர்கள் 36 பேரும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடற்தொழிலாளர்கள் பயன்படுத்திய ஆறு படகுகளும் ஏழு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 05ஆம் மாதம் 7ம் திகதிக்கு தவணையிடப்பட்டது.


