கடற்றொழிலாளர்களுக்கு இருந்த பாதுகாப்பு தற்போது இல்லை : து.ரவிகரன்

Government Of Sri Lanka Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Shan Nov 22, 2023 11:16 PM GMT
Report

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது கடற்றொழிலாளர்களுக்கு  இருந்த பாதுகாப்பு தற்போது இல்லை என முன்னாள் வட மகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தினை முன்னிட்டு சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு ஊர்வலத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எமது கடற்றொழிலாளர்கள் கொக்கிளாய் தொடக்கம் பேய்ப்பாறைப்பிட்டி வரையான கடலில் நல்ல எழுச்சியோடு கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்பு எடுத்த நபர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்பு எடுத்த நபர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


தற்போது மிக கடுமையான முறையில் தென் இலங்கையில் சட்டவிரோத தொழில் செய்யும் கடற்றொழிலாளர்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் . வடக்கு, கிழக்கு மாகாணத்தினை எடுத்துக்கொண்டால் வவுனியா தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களும் கடல் பகுதியிலே இருக்கின்றன.

கடற்றொழிலாளர்களுக்கு இருந்த பாதுகாப்பு தற்போது இல்லை : து.ரவிகரன் | Fishermen Are Not Protected Ravikaran

வடக்கு, கிழக்கை மையமாக வைத்து கடல் வளங்களை சுரண்டி தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் , சட்டவிரோத தொழில் செய்வதற்கு ஊக்குவிப்பு கொடுத்து அந்நிய நாட்டு  படகுகள் வந்து இங்கே அட்டகாசமாக தங்களுடைய தொழில்களை செய்வதும், பிடிக்கப்படும் மீன்கள் அல்லது இறால்கள், எல்லாவற்றையும் திரும்பவும், எங்களுக்கு விற்பனை செய்வதும், சர்வதேச நாடுகளில் இருந்து மீனை இங்கே கொள்வனவு செய்வதுமான செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த கடல் எங்களுடைய இளைஞர்களின் பாதுகாப்பில் இருந்தது. அந்த நேரம் எவ்வளவு யுத்தம் நடந்து கொண்டிருந்தாலும், எங்களுடைய கடற்றொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு இங்கே இருந்தது.

பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்

அந்த பாதுகாப்பை வைத்துக் கொண்டு எங்களுடைய கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக கடலிலே மீன் பிடித்து வந்தார்கள். ஆழ்க்கடலெங்கும், கடற்றொழில் நடைமுறைக்கு ஏற்ப தொழிலை செய்து வந்தார்கள். எந்தவித சட்டவிரோத தொழில்களும் இல்லை. அந்நிய ஆதிக்கமும் இல்லை.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் எங்களுடையவர்களை மௌனிக்க செய்துவிட்டு அட்டகாசப்படுத்துகின்றார்கள், சட்ட விரோதிகள். அவர்களுக்கு இலங்கை அரசாங்கம் துணையாக செயல்படுகின்றது.

வரலாற்றில் முதன்முறையாக சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான இலங்கை பெண்

வரலாற்றில் முதன்முறையாக சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான இலங்கை பெண்


இதனால் எங்களுடைய கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அடி மடி இழுவை தொழில், சுருக்குவலை மூலம் மீன்பிடித்தல், வெடி பயன்பாட்டு முறை மூலம் மீன் பிடித்தல், வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் என பல வித ரகங்களில் சட்டவிரோத தொழில்களை செய்து கொண்டிருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும்.

கடல் சூழலியலை சிதைப்பதனை கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் இந்த கடற்றொழிலாளர்களுடைய கோரிக்கை. இந்த கடற்தொழிலை சரியாக செய்வதற்கு , சரியான முறையிலே நாங்கள் வாழ்வதற்கு, எங்களுடைய கடற்றொழில் குடும்பங்கள், வாழ்வாதார நிலைமைகளை, சீர்படுத்தவோ, எங்களுடைய இளைஞர் எழுச்சியாக, தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இந்த வாய்ப்பை இலங்கை அரசாங்கம். ஏற்படுத்தி தரவேண்டும்.

யாழில் வீடுகளின் குளியறைகளுக்குள் கமரா பொருத்திய இளைஞர் கைது

யாழில் வீடுகளின் குளியறைகளுக்குள் கமரா பொருத்திய இளைஞர் கைது


அரசாங்கமானது சீனாவுக்கும், இந்தியாவுக்கும், வேறு நாடுகளுக்கும், கடல்களை விற்றுக்கொண்டு, எங்களுடைய கடற்றொழிலாளர்களை பட்டினி போடும் செயற்பாட்டை நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் விட்டால், எங்களுடையவர்கள் கொதித்து எழும் போது நீங்கள் தாக்கு பிடிக்க மாட்டீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US