இந்தியாவில் கொடூரம் - தலைகீழாக தொங்கவிடப்பட்டு தாக்கப்பட்ட கடற்றொழிலாளர்
கையடக்கத் தொலைபேசியை திருடியதாக குற்றம் சுமத்தி கடற்றொழிலாளர் ஒருவரை ஏனைய கடற்றொழிலாளர்கள் தலைகீழாக தொங்கவிட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்திய கர்நாடகா மங்களுாரில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கடற்றொழிலாளரின் கால்கள் இரண்டையும் கயிற்றால் கட்டி அவரை மேலாடை இல்லாமல் படகு ஒன்றில் இருந்த பாரந்துாக்கியில் தலைகீழாக தொங்கவிட்டு அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது சுற்றிவர நின்ற கடற்றொழிலாளர்கள், திருடியதை ஒத்துக் கொள்ளுமாறு அவரிடம் வற்புறுத்திய காட்சி காணொளியாக பகிரப்பட்டுள்ளது.
இந்த காணொளி வெளியானதை தொடர்ந்து மங்களூர் நகர போலீசார், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.