உள்ளூர் சிறுதொழிலாளர்கள் கடற்றொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது - கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் விசனம்
உள்ளூர் சிறுதொழிலாளர்கள் கடற்றொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது உள்ளூர் இழுவைப் படகுகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் சுருக்குவலையினால் பாரியளவில் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என ஆதிகோவிலடி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர் மதியழகன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை 1996 ம் ஆண்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத்துறை பிரதி பணிப்பாளர் தெரிவிப்பதாகவும், ஆனால் யாழ் மாவட்ட நீரியல் வளத்துறை பணிப்பாளரால் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் முன்னாள் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
1996ம் ஆண்டு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கிளிநொச்சி AD தெரிவிக்கின்றார் , இதன்படி ஏன் யாழ் மாவட்ட AD யினால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.
பதவிகளில் இருந்து விலகுங்கள்
சுருக்குவலைத் தொழிலை மேற் கொள்ளமுடியாத நிலையில் இன்று மேற்கொண்டு வருகின்றனர். இதனை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை.
தற்போதுள்ள கூட்டுறவு ஆணையாளர் ஒரு அரசியற் கட்சியின் கீழ் இயங்கிவரும் நிலையில் சம்மேளனத்தை கலைத்து நியமன அடிப்படையில் நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் கூட்டுறவு சிதைவடைந்து போயுள்ளது. கட்சிக்கு அடிபணிந்து நியமனம் வழங்கல் சட்டத்தில் இடமில்லை. சட்டவிரோத முறையிலான தொழிலை உடன் நடைமுறைப்படுத்துங்கள், உங்களுக்கு நடைமுறைப்படுத்த தகுதியில்லை என்றால் பதவிகளில் இருந்து விலகுங்கள்.
தொழிலாளர்கள் யாழ் நீரேரியில் சிறகு வலைத் தொழிலை மேற்கொள்ள முடியாதவாறு இருக்கிறார்கள்.
அட்டைப் பண்ணைகளால் சீரழிந்துபோயுள்ளது. இன்று மன்னாரில் சீனர்கள் வழக்குப் போடும் நிலைக்கு வந்துள்ளது. சீனாவுக்கு கடலட்டைப் பண்ணை போடுறார்கள் என்று கூறும் போது யாரும் கேட்கவில்லை, பினாமியாக உள்ள ஒருவருக்கு சீனர் வழக்ககுப் போடும் நிலை உருவாகியுள்ளது.
பண்ணை நடத்தத் தெரியாதவர்களுக்கு பண்ணையைக் கொடுத்து இன்று அவர்கள் அழுகிறார்கள். கடல்வளம் சீரழிந்து மாசுபடுகிறது.
இதனை ஆளுநர் கூடக் கதைக்க முடியவில்லை, ஒருகிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு எங்களை அழைப்பது கிடையாது, எமது வளத்தையும் சாகடித்து எம்மையும் சாகடிக்காமல் பதவிகளை விட்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
