வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை உயிருடன் பத்திரமாக கடலில் விட்ட கடற்றொழிலாளர்கள்
கரை வலை கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களின் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை உயிருடன் மீட்டு பத்திரமாக கடலில் விட்டவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், பாம்பன், உச்சிப்புளி, சேராங்கோட்டை, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடற்றொழிலாளர்கள் கரைவலை கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இன்று (15) கடற்றொழிலாளர்கள் கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது வலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் அரிய வகை கடல் வாழ் உயிரினமான சித்தாமை ஒன்று உயிருடன் சிக்கியது.
பரிசுத் தொகை
இதை அறிந்த கடற்றொழிலாளர்கள் வலையில் இருந்த பிற மீன்களை பிரித்து எடுத்து விட்டு உயிருடன் வலையில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆமையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக கடலில் உயிருடன் பாதுகாப்பாக விட்டனர்.

இதனை அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் காணொளி எடுத்து 'மீன்பிடி வலைகளில் சிக்கும் ஆமைகளை மீண்டும் பத்திரமாக கடலில் விட வேண்டும்' என விழிப்புணர்வு காணொளியை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
தமிழக அரசின் வனத்துறை சார்பில் அழிவின் விளிம்பில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை பத்திரமாக மீட்டு கடலில் விடும் கடற்றொழிலாளர்களுக்கு பரிசுத் தொகையை வழங்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri