புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ள பணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு பணம் அனுப்பும் செயற்பாடானது கடந்த மாதத்தில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. ஒக்டோபர் மாதத்தில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அதன்படி, 2024ஆம் ஆண்டு 587.7 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட பணம் அனுப்புதல், இவ்வாண்டு அக்டோபரில் 712 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணம் அனுப்புதல்
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 20.1 சதவீத உயர்வு என கூறப்படுகின்றது.
ஜனவரி - அக்டோபர் மாதங்களுக்கான மொத்த பணம் அனுப்புதல் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகின்றது.

இது கடந்த வருடம் 5.43 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, புலம்பெயர் தொழிலாளரகள் பணவனுப்புதல் ரூ.215.8 பில்லியனை எட்டியுள்ளதாக தரவுகள் தெரிவிப்பதாக மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam