மட்டக்களப்பில் இயந்திர படகு விபத்தில் கடற்றொழிலாளர் ஒருவர் பலி
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் இயந்திர படகு கவிழ்ந்ததில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது, இன்று காலை (13) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, திராய்மடு பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோடீஸ்வரன் வேணுராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு கடலுக்கு முகத்துவாரம் ஊடாக கடற்றொழிலுக்கு இரண்டு கடற்றொழிலாளர்கள் இயந்திர படகின் மூலம் சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
கடற்றொழிலில் ஈடுபட்ட பின்னர் இருவரும் இன்று காலை இயந்திர படகினை முகத்துவாரத்தில் உள்ள கடல் நீரும் ஆற்று நீரும் சேருமிடமான ஆற்றுவாய் ஊடாக மட்டக்களப்பு வாவிக்குள் செலுத்தி கொண்டிருக்கும் போது ஆற்றுவாய் பகுதியில் படகு கவிழ்ந்துள்ளது.

இதன்போது, அருகில் படகில் இருந்தவர்களினால் ஒருவர் மீட்கப்பட்டதுடன் மற்றவரை மீட்கமுடியாத நிலையில் அவரின் சடலம் கரையொதுங்கியது.
இந்நிலையில், மீட்கப்பட்ட நபர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, சடலம் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri