யாழில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 18 பேர் கைது
முறையான அனுமதிப்பத்திரமின்றி கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக வடமராட்சி கிழக்கு பகுதிகளில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் 669 கடலட்டைகள், 6 டிங்கிகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகள்
இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 42 வயதுக்குட்பட்ட கல்பிட்டி மற்றும் மன்னார் ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்.கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
