மட்டக்களப்பில் பறிமுதல் செய்யப்பட்ட விற்பனைக்கு தகுதியற்ற மீன்கள் (Photos)
மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் விற்பனைக்கு தகுதியற்ற மீன்கள் அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகரால் பறிமுதல் செய்யப்பட்டு எரியூட்டி அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திடீர் பரிசோதனையானது இன்று (06.09.2023) பொதுச் சுதாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 76 கிலோ கிராம் பழுதடைந்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மன்னாரில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது: பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு நடவடிக்கை (Photos)
சட்ட விரோத புகையிலை விற்பனை
இந்நிலையில் பழுதடைந்த மீன்களை விற்பனை செய்த 2 வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்துள்ளதாகவும், மேலும் 6 வியாபாரிளுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், களுவாஞ்சிகுடிப் பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
மேலும், புகையிலை மற்றும் மதுசார விற்பனை சட்டத்திற்கு முரணான வகையில், வெளிக்காட்டி விற்பனை செய்த 11 கிலோ கிராம் புகையிலையையும் இதன்போது களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டு எரியூட்டி அழிக்கப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் கே.இளங்கோவன் கூறியுள்ளார்.




நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
