மன்னாரில் சிறுபோக செய்கைக்கான முதல் கட்ட நீர் விநியோகம்

Mannar Sri Lanka Northern Province of Sri Lanka
By Ashik May 20, 2024 02:06 PM GMT
Report

மன்னார் (Mannar) கட்டுக்கரை குளத்தின் கீழ் உள்ள புலவு நிலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற சிறுபோக நெற்செய்கைக்கான முதல் கட்ட நீர் விநியோகம் எதிர்வரும் 27ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் (K.Kanageshwaran) தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (20.05.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் புலவு நிலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற சிறுபோக நெற் செய்கைக்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

டயானா கமகே தலைமறைவு: நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு அறிக்கை

டயானா கமகே தலைமறைவு: நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு அறிக்கை

காலபோக பயிர்ச்செய்கை

இந்த மாவட்டத்தில் மொத்தமாக காலபோக பயிர்ச்செய்கையானது 30 ஆயிரத்து 36 ஏக்கர் பரப்பளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் சிறுபோக செய்கைக்கான முதல் கட்ட நீர் விநியோகம் | First Water Supply Small Scale Irrigation Mannar

இதனடிப்படையில், கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்தில் 12இற்கு 1 என்ற அடிப்படையில் 2918 ஏக்கர் கட்டுக்கரை குளத்தின் கீழ் இவ்வருடத்திற்கான சிறுபோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

எனினும், தற்போது பெய்து வருகின்ற மழையுடனான காலநிலையை கருத்திற்கொண்டு கடந்த 16ஆம் திகதி வாய்க்கால் அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் இடம்பெற்ற கூட்டத்திற்கமைவாக 10இற்கு 1 என்ற அடிப்படையில் அதாவது 10 ஏக்கர் பெரும்போகம் செய்த ஒரு விவசாயிக்கு 1 ஏக்கர் புலவில் பயிர்ச்செய்கையில் இவ்வருடம் சிறு போகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் விபத்து நடந்த இடத்தில் இருந்து உடல்களை மீட்கும் மீட்பு குழுவினர்

ஈரானில் விபத்து நடந்த இடத்தில் இருந்து உடல்களை மீட்கும் மீட்பு குழுவினர்

நீர் திறப்பு 

இதற்கமைய, இந்த ருடம் 3495 ஏக்கர் சிறுபோக செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, திறக்கப்பட்ட புலவுக்கு மேலதிகமாக 6 புலவுகள் திறக்கப்பட்டு சிறு போகத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மன்னாரில் சிறுபோக செய்கைக்கான முதல் கட்ட நீர் விநியோகம் | First Water Supply Small Scale Irrigation Mannar

மேலும், முதலாம் கட்ட நீர் திறப்பு எதிர்வரும் 27ஆம் திகதி அன்று சிறு போகத்திற்கு திறந்து விடப்பட உள்ளது. நீர் விநியோக இறுதி திகதி செப்டெம்பர்1ஆம் திகதி என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக செய்கை முன்னெடுக்கவுள்ள விவசாயிகள் நீர் திறப்பு திகதி மற்றும் நீர் விநியோக இறுதி திகதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறுபோக செய்கையை மிக விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

இதில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுத்தர மறுக்கும் சர்வதேச சமூகம்: மனோ எம்.பி காட்டம்

தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுத்தர மறுக்கும் சர்வதேச சமூகம்: மனோ எம்.பி காட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US