இந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்ட் வெற்றி தோல்வி இன்றி முடிவு
நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 720/9 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இந்திய அணியின் கே.எல்.ராகுல் 136 ஓட்டங்களும், ரிஷப் பண்ட் 128 ஓட்டங்களும் எடுத்து அசத்தினர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 368 ஓட்டங்கள் எடுத்தது. ஹென்றி நிக்கோல்ஸ் 175 ஓட்டங்களும், கிளென் பிலிப்ஸ் 118 ஓட்டங்களும் விளாசினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சை சமாளித்த நியூசிலாந்து 239/5 ஓட்டங்கள் எடுத்தது.இந்த நிலையில் 5 ஆம் நாள் நிறைவில், டெரில் மிட்செல் 49 ஓட்டங்களுடனும், கிளென் பிலிப்ஸ் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன்போது, இந்திய அணிக்கு வெற்றி பெற மேலும் 5 விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில், இரு அணிகளும் ஆட்டத்தை முடிக்க ஒப்புக்கொண்டன.
சமநிலையில் முடிந்த இந்தப் போட்டியால் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்தியா தொடர்ந்து நான்காவது இடத்தில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது.
இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி அச்சுறுத்தல் குறித்து இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்