உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான முதல்படி : இணக்கம் எட்டப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு
கருங்கடலில் பாதுகாப்பான வழித்தடத்தை உறுதி செய்வதற்கும், பரஸ்பர எரிசக்தி வசதிகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடை செய்வதற்கும், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் தனித்தனி ஒப்பந்தங்களை எட்டியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் செயற்படுத்தப்பட்டால், உக்ரைனில் ரஷ்யாவின் மூன்று ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைகளை நோக்கி வோஷிங்டன் ஒரு படியாகக் கருதும் பரந்த போர்நிறுத்தத்தை நோக்கிய தெளிவான முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு
எவ்வாறாயினும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நம்ப முடியாது என்றும், வோஷிங்டன் அவருக்கு உத்தரவை பிறப்பித்தால் மட்டுமே கருங்கடல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
இந்தநிலையில், கடல்சார் போர் நிறுத்தம் மற்றும் பரஸ்பரம் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை நிறுத்துதல் ஆகிய இரண்டிற்கும் கியேவ் ஒப்புக்கொண்டதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக, போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முயன்ற அமெரிக்கா, முதலில் 30 நாள் முழு போர் நிறுத்தத்தை முன்மொழிந்தது.
இதற்கு உக்ரைன் மார்ச் 11ஆம் திகதியன்று அன்று கொள்கையளவில் ஒப்புக்கொண்டது.
ஆனால் புடின் நீண்ட நிபந்தனைகள் மற்றும் கேள்விகளுடன் போர் நிறுத்தத் திட்டத்துக்கு பதிலளித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
