யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இளங்கலை மாணவர்களுக்கான முதலாவது ஆய்வரங்கு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இளங்கலை மாணவர்களுக்கான முதலாவது ஆய்வரங்கு இன்று காலை ஆரம்பமாகியது.
யாழ்.பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்வின் திறவுரைகளை அமெரிக்காவின் ஸலிபெரி பல்கலைக்கழக பேராசிரியர்.எஸ்.ஐ.கீதபொன்கலன், கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்தின் ஓய்வு நிலைப் பேராசிரியர் கலாநிதி சாந்தி செகராஜசிங்கம், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும் தகைசார் பேராசிரியருமான பேராசிரியர் வ.மகேஸ்வரன், மற்றும் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் நிகழ்த்தினர். இவ் ஆய்வுத் தடங்களுக்குத் துறைசார் பேராசிரியர்கள் தலைமை தாங்கவுள்ளனர்.
'சமத்துவம், சமநீதி மற்றும் அபிவிருத்திக்கான மானுடவியல் சமூக விஞ்ஞானம்'
எனும் தொனிப்பொருளுடன் முன்னெடுக்கப்படும்.இந்த ஆய்வரங்கில் கடந்த வருடம்
கலைப் பட்டதாரிகளாக வெளியேறிய சுமார் 100 மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள்
சமர்ப்பிக்கப்படவுள்ளன.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam