முதலில் ஜனாதிபதித் தேர்தல்! பொதுவேட்பாளராகக் களமிறங்கும் ரணில்
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் எனவும், அதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பொது வேட்பாளராகவே களமிறங்குவார் என்றும் கொழும்பு அரசியல் உயர்மட்டங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? முதலில் இடம்பெறும் என்ற குழப்பம் உருவாகியுள்ள சூழலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளார். அதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும் பணித்துள்ளார்.

முஸ்லிம் கடைகளில் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமென கூறினார்கள் - நினைவுபடுத்தப்படும் அமைச்சர் மனுஷ
இரண்டாம் கட்டக் கொடுப்பனவு
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) இரண்டாம் கட்டக் கொடுப்பனவு ஜூலை மாதமளவில் இலங்கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்தக் கொடுப்பனவு கிடைத்த கையோடு நிவாரணங்களை வழங்கி ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள விரும்புகின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
செப்டெம்பர் 18ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் 18ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதியை அண்மித்த தினத்தில் தேர்தலை நடத்தவே ஜனாதிபதி ரணில் விரும்புவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட மாட்டார் எனவும், பொதுவேட்பாளராகவே களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
