அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக நியமனமாகியுள்ள முதல் முஸ்லிம் பெண்
அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தின் மூலம் இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் குறித்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ள இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இலங்கையின் அஞ்சல் திணைக்கள வரலாற்றில் இதற்கு முன்னர் இந்தப் பதவிக்கு முஸ்லிம் பெண்ணொருவர் நியமனம் பெற்றிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு
மட்டக்களப்பு - ஏறாவூரைச் சேர்ந்த பாத்திமா ஹஸ்னா, அஞ்சல் திணைக்கள உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக பதவி உயர்வு வழங்கப்படுவதற்கு முன்னர் இலங்கை அஞ்சல் பயிற்சி நிறுவகத்தில் அஞ்சல் பயிற்சிப் போதனாசிரியராகப் பணியாற்றினார்.
அஞ்சல் திணைக்களத்தினால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட உதவி அஞ்சல் அத்தியட்சகர்களுக்கான பரீட்சையில் அஞ்சல் திணைக்களத்தில் அதிகாரிகளாகப் பணியாற்றிய 39 பேர் தேர்ச்சிபெற்றிருந்தனர்.
அவ்வாறு சித்தியடைந்தவர்களில் 12 பேர் அஞ்சல் திணைக்கள உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்கர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 23 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
