2026இன் முதல் சந்திர கிரகணம் மார்ச்சில்...
2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கிரகணத்தின்போது சந்திரன் 82 நிமிடங்கள் இரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வானியல் தரவுகளின்படி, மார்ச் நிகழ்வில் இந்த முழுமை நிலை சுமார் 58 நிமிடங்கள் மற்றும் 19 வினாடிகள் நீடிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இருப்பினும், வளிமண்டல நிலைமைகளைப் பொறுத்து, நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும் அந்த நிலை சுமார் 82 நிமிடங்கள் வரை நீடிப்பது போன்ற உணர்வைத் தரக்கூடும் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஆசியா மற்றும் அவுஸ்திரேலியாவில்
கிழக்காசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பசிபிக் பெருங்கடல் பகுதிகள் மற்றும் வட மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த கிரகணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ காண முடியும் என்றும், ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்கள், அந்தந்த ஊர் உள்ளூர் நேரத்தைப் பொறுத்தும், வானில் நிலவு இருக்கும் நிலையைப் பொறுத்தும் இந்த கிரகணத்தை ஓரளவிற்குத் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கிரகணம் கிழக்கு ஆசியா மற்றும் அவுஸ்திரேலியாவில் மார்ச் 3 அன்று இரவு நேரத்தில் இந்த கிரகணம் தெரியும்.
வட அமெரிக்காவில் மார்ச் 3 அன்று அதிகாலையில் இது நிகழும்.
இந்திய நேரப்படி இந்த நிகழ்வு மார்ச் 3 அன்று மாலை சுமார் 02:14 மணிக்கு தொடங்கி இரவு 07:53 மணி வரை நீடிக்கும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri