இலங்கைக்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழர்: சபையில் சிறீதரன் புகழாரம்
அனைத்துலக களப் போட்டிகளில் முதன்முதலாக இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஒன்றை நாகலிங்கம் எதிர்வீரசிங்கமே (Nagalingam Ethirveerasingam) பெற்றுக்கொடுத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (Sritharan) புகழாரம் சூட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (25.04.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயர் உற்றோம்.
அவரது மறைவு ஈழத்தமிழர்களின் அடையாள மனிதர்களில் ஒருவரின் மறைவாக உள்ளது. இவர் இலங்கையின் முன்னணி உயரம் பாய்தல் வீரராகவும் சாதனையாளராகவும் திகழ்ந்தார்.
அத்துடன், விளையாட்டு வீரர் என்பதையும் கடந்து ஒரு கல்வியியலாளராகவும் தனித்துவம் பெற்றவர் ஆவார்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |